தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனைகள்:
தமிழக கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் அவர்கள் இந்திய அணிக்காக பல்வேறு சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கின்றார். இவர் அதிக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். அஸ்வின் அவர்கள் இந்தியாவில் சுயர் பந்துவீச்சின் மாஸ்டர் ஆவார். இவர் மிகவும் நன்றாக வந்துகளை வீசி அதிகப்படியான விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவிற்கு அதிக பெருமைகளை சேர்த்துள்ளார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இவரின் சாதனைகள்:
- சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 537 விக்கெட்களை எடுத்து இவர் ஒரு சாதனை படைத்துள்ளார்.
- இவர் இந்திய அணியின் அணில் கும்ப்ளே அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கட்களை எடுத்தவர் ஆவார்.
- இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆறு சதங்களும் மற்றும் 3500+ ரன்கள் அடித்தும் இருக்கிறா ர். எனவே இவர் பந்து வீசுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கிறார்.
- 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
- இவர் அதிகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 11 மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டுகளை வென்றுள்ளார்.
- 65 டி20 போட்டியில் 75 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இவர் 6 சதங்கள் 16 அரை சதங்கள் பேட்டிங்கில் அடித்துள்ளார்.
விருதுகள்:
அஸ்வின் அவர்கள் இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில் அதிக அளவில் உழைத்திருக்கிறார். இவரை பாராட்டும் விதமாக நிறைய விருதுகளையும் இவர் வாங்கியுள்ளார்.
- தேசிய மற்றும் அர்ஜினா விருது -2015
- இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார் - 2025
IPL போட்டிகள்:
- இவர் சென்னை அணிக்காக IPL போட்டியில் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டில் சென்னை வெற்றி பெற்றதற்கு ஒரு முக்கிய காரணமாக இவர் இருந்திருக்கிறார்.
- இவர் IPL 180+ விக்கன்களை வீழ்த்தியுள்ளார். இவர் IPL போட்டியில் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவரின் வாழ்க்கை பற்றிய சில தகவல்கள்:
- அஸ்வின் அவர்கள் சென்னை Vest Mambalam இல் பிறந்தவர். SSN College Of Engineering இல் IT பட்டம் பெற்றவர் ஆவார்.
- அஸ்வின் அவர்கள் 2024 ஆம் ஆண்டு அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இது அனைவருக்கும் வருத்தத்திற்குரிய ஒன்றாக இருந்தாலும் இவர் இந்திய அணிக்காக பல்வேறு வகையில் தனது கடின உழைப்பினை செலுத்தியுள்ளார்.
- மேலும் தமிழகத்தில் நடக்கும் TNPL இவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். 2025 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு மீண்டும் IPL விளையாடினர்.
- அஸ்வின் அவர்கள் தனது திறமையையும் புத்திசாலித்தனத்தையும் கொண்டு இந்திய கிரிக்கெட் அணியில் தனது அடையாளத்தை பதிவு செய்துள்ளார்.
- அஸ்வினைப் போலவே பல திறமையான விளையாட்டு வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடினார் நம் தமிழகத்திற்கு மிகவும் பெருமையாக இருக்கும்.
ஓய்வு அறிவிப்பு:
- இவர் டிசம்பர் 18 2024 ஆம் ஆண்டு அன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
- இன்று எனது சர்வதேச கிரிக்கெட் போட்டியின் பயணத்தின் கடைசி நாள் என்று தோனியை போலவே கூறினார்.
தமிழ்நாட்டின் பெருமை:
- அஸ்வின் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
- இவர் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர்.
- தமிழ்நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு உள்ளது.
- அஸ்வின் ஒரு மேட்ச் வின்னர் திறமையான ஆல் ரவுண்டர்
- இவர் அதிக அளவில் பாராட்டக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார்.
- இவரின் பயணம் முடிந்தாலும் இவர் செய்த அனைத்து சாதனைகளும் கிரிக்கெட் வரலாற்றில் இன்றியமையாததாக நிலைத்திருக்கும்.
கடைசி தருணங்கள்:
ஓய்வு அறிவிப்பின்போது விராட் கோலி உடன் மிகவும் நெகிழ்ச்சிகரமாக பேசி அவருடைய கடைசி நிமிடங்களை செலவழித்தார். அதற்குரிய பதில் எனக்கு இன்னும் ஆற்றல் இருக்கிறது நான் கிளப் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் என்று கூறினார்.
0 கருத்துகள்